பிரான்ஸ் தமிழ் மக்(கு)கள் பேரவையின் மாதாந்த கூட்டமும் அதன் தீர்மானங்களும்

Monday, February 8, 2010
பிரான்ஸ் தமிழ் மக்(கு)கள் பேரவையின் மாதாந்த கூட்டமும் அதன் தீர்மானங்களும்

பிரான்சின் மக்(கு)கள் பேரவையின் மாதாந்தக்கூட்டம் 07.02.10.124 Bis rue du Bagnolet ல் அமைந்துள்ள மண்டபத்தில்
( metro : Porte de Bagnolet - ligne 3) ஞாயிறன்று நடைபெற்றது நூறு பேரளவில் கலந்து கொண்டிருந்த இந்தக்கூட்டத்தில் பிரான்ஸ் தமிழ் மக்(கு)கள் பேரவையின் தலைவர் சோதி அவர்கள் சில தீர்மானங்களை நிறவேற்றினார்..அவற்றில் முக்கியமானவை கீழே

1) ஜரோப்பிய ஒன்றியத்தினுள் புகுந்து வேலை செய்வது.....

ஜரோப்பிய ஒன்றியம் என்ன இவரது சொந்தக்காரரின் வீடா புகுந்து வேலை செய்வதற்கு. பிரான்சின் அரசியலில் எந்தவொரு தேசியக் கட்சிகளிலும் அடிப்படை உறுப்பினராகவேனும் இல்லாதது மட்டுமல்ல சாதாரணமான பிரான்சின் அரசியலில் எந்தவொரு கிரமசபையில் கூட செல்லவாக்கு செலுத்தாக தமிழ் மக்(கு)கள் பேரவை ஜரோப்பிய யூனினிற்கள் புகுந்து வேலை செய்யப் போகிறார்களாம்..அதுமட்டுமல்ல அண்மையில் இவர்களால் நடாத்தப்பட்ட வட்டுக் கோட்டை மீதான கொட்டைப்பாக்கு தீர்மான வாக்கெடுப்பு பற்றிய விபரங்களே பிரான்சின் உள்ளுர் பிரெஞ்சு பத்திரிகைகளில் கூட இடம்பெற்றிருக்கவில்லை யென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது..இந்த லட்சணத்தில் இவர்கள் மக்களை வைத்து காமெடி கீமெடி பண்ணுகிறார்களா??

தீர்மானம் 2) யுத்தத்தில் பாதிக்கப்பட்;ட போராளிகளிற்கும் குழந்தைகளிற்கும் உதவுவது

எப்படி உதவப் போகிறார்கள்?? மகிந்தாவுடன் ஒப்பந்தம் போட்டா?? இலங்கையில் எந்த உதவி முயற்சிகளும் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி செய்யமுடியாது அப்படி உதவுவதானால் எந்த உதவி நிறுவனமானாலும் இலங்கையரசுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தி இவர்கள் யார்?? உதவும் நோக்கங்கள் என்ன என்பதனை தெளிவாக புரியவைத்துத்தான் அனுமதி பெற்றபின்னரே அங்கு உதவிகளை மேற்கொள்ளலாம்..நிலைமை இப்படியிருக்க நாங்கள்தான பிரான்ஸ் மக்கள் பேரவை தனித் தமிழீழத்தற்கான வாக்கெடுப்பு நடத்தியவர்கள் நாங்கள் போராளிகளிற்கு உதவப் போகிறோம் என்று இலங்கையரசிடம் அனுமதி பெற்றுள்ளனரா??யாருக்கு காது குத்துகிறார்கள்..

தீர்மானம் 3) தேசியக்கூட்டமைபின் தலைவர் சம்பந்தரை போட்டுத்தளுவது

சோதியின் இந்தத் தீர்மானத்தினை நிறைவேற்றியதுமே கூட்டதில் பலர் சோதிக்கு எதிராக குரல் எழுப்பியதும் சோதி உடனேயே வழிந்தபடி நான் சும்மா பகிடிக்கு சொன்னாhன் என்றுவிட்டார்..யானைக்குட்டி பொய் சொன்னது என்கிற கதைபோல மழுப்பிவிட்டார்..ஆனால் இவரது இந்த ஒரு தீர்மானமே பிரான்ஸ் தமிழ் மக்(கு)கள் பேரவையை தடை செய்யப் போதுமானது.. இவர் போன்ற அரசியல் அறிவு எதுவுமேயற்ற ஒரு அரைகுறை தலைவராக இருக்கும் ஒரு அமைப்பின் கீழ் மக்கள் எப்படி திரள்வது.

தீர்மானம் 4) மேலே கூறிய எல்லாவற்றையும் நிறைவேற்றுவதற்கு உனடியாக ரிக்ற்றுகள் அடித்து பணம் சேர்ப்பது.....

பணம் எதுக்கு யாரிற்காக சேர்க்கப் போகின்றார்கள் என்பதற்கு புலநாய் உங்களிற்கு புரியவைக்கவேண்டியதில்லை எனவே மக்களே உசார்ர்ர்ர்ர்ர்ர்.....


சோதிஎன்பவர் புலிகள் அமைப்பில் இருந்த தவபாலன் என்பவரின் சகோதரர் என்கிற தகுதியைத் தவிர வேறெந்த தகுதியும் அற்றவர்.. அதுமட்டுமல்ல இந்த அமைப்பினை இயக்குபவர்களில் ஒருவரான சுக்குளா என்பவர் புலிகளின் வடமராச்சி நெல்லியடி பிரிவு அரசியல் பொறுப்பாளராக இருந்தவர்


ஈழத்தில் இந்தியப்படை காலத்தில் இந்திய இராணுவத்திடம் பிடிபட்டு பின்னர் பெருந்தொகையான ஆயுதங்களையும் பலபோராளிகளையும் இந்திய இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்தவர்..அதே நேரம் புலிகள் அமைப்பினால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத் தக்கது..இவரை நன்றிக்கடன் மறவாத இந்திய இராணுவம் கொழும்பில் கொண்டுவந்து விட்டதையடுத்து இவர் வெளிநாடு வந்து சேர்தவராவர்.. அடுத்தவர் மேக்தா என்பவர் .இத்தாலியில் புலிகளின் அமைப்பிற்கு பரப்புரைக்கு பொறுப்பாக இருந்த காலத்தில் பலர்மோ நகரில் இரண்டு தமிழ் பெண்களுடன் பாலியல் தொர்புகளை வைத்திருந்து இயக்கப் பணத்தினை அவர்களிற்கு செலவளித்த காரணத்தினால்..அவரின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்குடன் புலிகளால் பாரிசிற்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தார்..ஆனால் பாரிசில் மக்களிடம் மிரட்டி பணம் சேர்த்தார் என்று பிரெஞ்சு காவல்த்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது..தற்சமயம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் வெளியில் உலாவும் இவரும் தமிழ் மக்(கு)கள் பேரவையின் முக்கிய இயக்குனர்..இப்படி கள்ளரும்..காட்டிக்கொடுத்தவர்களும் சேர்ந்து இயக்குகிற மக்(கு)கள் பேரவைதான் ஈழத்தமிழர்களிற்கு தமிழீழம் வாங்கிக் கொடுக்கப் போகிறதாம்...

புலநாயின் புலனாய்வுகள் தொடரும்...............

0 comments: