ஜேர்மன்: வாகீசன் அன் கோ "ஒரு சர்வாதீகாரியின் இறுதி அத்தியாயம்..."

Friday, March 5, 2010
முள்ளிவாயக்காலின் பின் புலத்தில் ஏற்பட்ட
பல குழப்பங்களுக்கு பிரதான காரணகத்தாவாக இருந்த
கஸ்றோ கும்பலின் ஜேர்மன் ரவுடி வாகீசன்
ஜேர்மனிய காவல் துறையினரால்
புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் "வாகீச" எடுபிடிகளான
சசி - சிவநாதன் - செந்தில் - மகிழன் ஆகியோரும்
கைது செய்யப்பட்டதாக அறியமுடிகின்றது.

"தேசிய இளவரசர்" கஸ்றோவினால்
புலத்தில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட போக்கிலிகளில்
அதிஉச்ச ரவுடியாக வாகீசன் கருதப்படுகின்றார்.






மண்ணுக்கும் புலத்துக்குமான தொடர்புகள்
முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில்
விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளராக
தன்னைத்தானே முடிசூட்டிக் கொண்ட வாகீசன்
தேசியத் தலைவரின் இடத்துக்கு அறிவற்ற "அறிவை" நியமித்தவர்.

தேசியத் தலைவரின் வீரச்சாவை கே.பி அவர்கள் அறிவித்தவுடன்
அடுத்து என்ன செய்வதென்று தெரியாத விழித்த கஸ்றோ கும்பலுக்கு
"மக்கள் தலைவரின் சாவை நம்பவில்லை..
ஆகையால் இச்சந்தர்பத்தை சரியாக பயன்படுத்துவம்" என்று
ஐடியா கொடுத்த புண்ணியவான்
வாகீசனே ஆகும்.

ஒவ்வொரு நாட்டு பொறுப்பாளர்கள்(?) அனைவரையும்
ஜேர்மனுக்கு அழைத்து கூட்டத்தை கூட்டிய வாகீசன்
"தலைவரின் சாவினை நாங்கள் அறிவிச்சால்
சனங்களின்ர போர் குணம் வற்றிப் போய்விடும்....
சனம் காசு தராது...
ஆகையால் தலைவர் இருக்கிறார் என்றே சொல்வோம்"
என்று எல்லோரையும் கூற வைத்ததும் வாகீசன்தான்.

யேர்மனி இரகசிய காவல்துறையினரால் இரவோடு இரவாக
இவ்ரவுடிக் கும்பல் கைது செய்யப்பட்ட செய்தியை
முதலில் வெளி;க் கொண்டுவந்த "யாழ் இணையம்;"
கஸ்றோ கும்பலினாhல் மிரட்டப்பட்டுள்ளது.

செய்தியை இணைப்பில் இருந்து அகற்றச் சொல்லி
அச்சுறுத்தப்பட்டதை தொடர்ந்து செய்தி அகற்றப்பட்டுள்ளது.
(புதினம்-தமிழ்நாதம் இணையம் இந்த புண்ணிவான்களின்
அச்சுறுத்தல் காரணமாகவே நிறுத்தப்பட்டமை
இங்கு குறிப்பிடடத்தக்கது.
இவர்களது ஊடக அச்சுறுத்தலுக்கு எதிராக
விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது)

எப்படியாவது கைது செய்யப்பட்டவர்களை வெளியில் எடுத்து விட்டு
இவ்வாறு ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று மக்களுக்கு எடு;த்துக்காட்ட
இக்கூட்டம் முனைவதாக அறிய முடிகின்றது.

இதேவேளை அனைத்துலக இளையோர் அமைப்பின் பொறுப்பாளர்(?) அன்புச் செல்வன்
வாகீசனின் இடத்தை நிரப்ப மறைமுகமாக ஒடித்திரிவதாகவும்
அறியமுடிகின்றது.

முள்ளிவாய்காலுக்கு பின்னர் உச்சம் பெற்ற வாகீசனின் ரவுடிசத்தையும்
துரோகத்தனங்களையும் இங்கே பாருங்கள் :

- தலைவர் சாவடைந்த நிலையின் மக்களுக்கு அவர் உயிருடன்
இருக்கின்றார் என்று நம்ப வைக்க ஈழமுரசு ஆதித்தனுடன் இணைந்து
தலைவரின் ஒத்த தோற்றத்தையோ அல்லது ஒத்த குரலையோ
உள்ள ஒருவரை தமிழகத்தில் தேடியவர் வாகீசன்.

இ;தற்கு பல லட்சக்கணக்கான பணத்தை ஒதுக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை பொறுப்பேற்றுள்ள ஆதித்தன்
தனது தமிழ்நாட்டு நட்பூடாக இதனை இரகசிய மேற்கொண்டுள்ளார்.
2010 மாவீரர் நாளுக்கு முன்னர் இக்காரியத்தை முடிக்கச் சொல்லி
வாகீசனால் பணிக்கப்பட்டுள்ளது.

- கே.பி அவர்கள் போராட்டத்தை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டவுடன்
காலத்தின் தேவை கருதி மேற்கொள்ள இருந்த மாற்றங்களை
பிரதானமாக எதிர்தவர்களில் ஒருவர் வாகீசன்.
காரணம் கே.பியின் வரவினால் தாங்கள் கையகப்படுத்தி வைத்துள்ள
பெருந்தொகையான பண மோசடி வெளிச்சத்துக்கு வந்துவிடும்
என்ற பயமும் தங்களுடைய மூடியாட்சி கவுண்டு விடும் என்ற
அச்சமும் ஆகும்.

எப்படியாவது கே.பியின் வழிகாட்டலை தடுக்க பல திட்டங்களை
தீட்டிய வாகீசன்
பல ஆண்டுகளாக வெளி;காட்டாமல் இருக்கின்ற கே.பியை
எப்படியாவது அவருக்கு வெளியில் வரவேண்டிய சூழலை ஏற்படுத்தி
ஒட்டி உறவாடி அவருடைய இடத்தை கண்டறிந்து தருகிறோம்
அதற்கு பதிலாக "நந்தவனத்து ராசாக்கள்" நந்தகோபன்..அறிவு..கலைசெல்வன்
ஆகியோரை இலங்கையை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும்
என்று சிறிலங்கா தூதரகத்துடன் இரகசிய பேச்சுவார்தை நடத்தியவர்
வாகீசனே ஆகும்.

பின்னர் கே.பி கைது செய்யப்பட்டு கடத்தப்பட
இதற்கு பதிலீடாக கருணாவின் தயவில் நந்தகோபன்..அறிவு..கலைச்செல்வன்
ஆகியோர் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். (இச்செய்தியை யேர்மனியில்
இருக்கினற் அறிவின் சகோதரியிடமே கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்)

தலைவரும்..ஆயிரக்கணக்கான போராளிகளும் களத்தில் மடிய
கஸ்றோவின் நந்தவனத்தில் இருந்து நரித்தனமாக தப்பியவர்களே
இன்று போராட்டத்தை வழிநடத்த போகிறார்களாம்.

- "நாடுகடந்த தமிழீழ அரசு" வேலைத்திட்டத்தை எப்படியாவது
தங்களது கட்டுப்பாடுக்குள் கொண்டு வரவேண்டும் என்று
கஸ்றோவின் புலத்து புளுக்கைகள் குத்தி முறிஞ்சு பார்த்து
ஏலாக் கட்டத்தில நாடுகடந்த அரசு மீதும்..அதனை நாடுவாரியாக செயற்படுத்த
இருக்கின்றவர்கள் மீதும் அச்சுறுத்தல்களை தொடுக்கும்
பொறுப்பை வாகீசன்-ஆதி;த்தன் தலைமை தாங்கி நெறிப்படுத்துகின்றனர்

நாடுகடந்த அரசுக்கான தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில்
எப்படியாவது அதனை நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்கின்ற
அல்லது முடிமறைக்கின்ற செயல்திட்டங்கள் சமீகாலத்தில்
உச்சம் பெற்றிருக்கின்றன.

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் பாரிசுக்கு வருகை தந்த
வாகீசன் 5 நட்சத்திர விடுயொன்றில் ஆதித்தன் அன் கோவை
சந்தித்து பல திட்டங்கள் தீட்டியுள்ளார் (இதனை மெடியா கவுஸ் கோபியிடம்
உறுதிப்படுத்திக் கொள்ளலாம்)

இதன் ஒரு அங்கமாகவே ஈழமுரசு - சங்கதி - பதிவு போன்ற ஊடகங்களில்
கே.பி துரோகி என்ற செய்திகள் வாரந் தோறும் தோற்றுவிக்கப்படுகின்றன.
கே.பியை துரோகி ஆக்குவதன் ஊடாக நாடுகடந்த அரசினை மறைமுகமாக
முடக்கலாம் என்ற எண்ணம்தான்.

இதேவேளை இவர்களி;ன் கூட்டு வெளிப்பாடுதான் கறுப்பு எனும் மின்மடல்.
தங்களின் கட்டமைப்புக்குள் வராதவர்கள்
எல்லோரையும் துரோகிகள் என்று இக்கறுப்பு மின்டமல் வழியாக சொல்வதுதான்
இக்கூட்டு ரவுடிகளின் வேலை.

(கறுப்பு 5வது பதிப்பில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை
பொறுப்பாளர் வினாயகம் பற்றி எழுதப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை ஆதித்தன்-வாகீசன் தரப்பு துறுதுறுவென வெளிப்படுத்த
வேண்டிய காரணத்தை விரைவில் தருகிறோம் )

- 2009 ஓகஸ்ற் மாதம் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தினால்
யேர்மனிய ஒழுங்கு செய்யப்பட்ட "ஈழத் தமிழர் வாழ்வுரிமை" மாநாட்டில்
வி.உருத்திரகுமாரன் நாடு கடந்த அரசு குறித்து உரையாற்றியிருந்தார்.
இந்நிகழ்வை ஒருங்கிணைத்த கணேசலிங்கள் வாகீசனால் "சுடப்படுவீர்கள்" என்று
அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

இதனை; தொடர்சியாக கடந்த மாதமும் மீண்டும் ஒரு தடவை "சுடப்படுவீர்கள்"
என்று மிரட்டப்பட்டுள்ளார்.

- கே.பி துரோகி என்று சங்கதி -பதிவு ஆகியவற்றில் வருகின்ற
செய்திகளை லங்காசிற இணையத்தில் முக்கிய செய்தியாக போடச் சொல்லி
லங்காசிறி குழுவினரை மிரட்டியதும் வாகீசன்தான்.

இவ்வாறு வாகீசனின் ரவுடிச ஆட்சி ஒரு சர்வாதீகார போக்கிலேயே
இருந்துள்ளது.
தற்போது அதன் இறுதி நேரம் வந்து விட்டது என்றே
தோன்றுகின்றது.

இதேவேளை வாகீசனின்; ஏனைய எடுபிடிகள் தலைமறைவாக்கியுள்ளனர்.
இரும்பொறை - எழுத்தாளர் ஒன்றிய "அறி;க்கைப் புயல்" திருமலைச் செல்வனும் இவர்களில் அடங்கும்.
இதில் இரும்பொறை பிரான்சுக்கு இன்னுமொரு பகுதிநேர பொறுப்பாளராக சில வாரங்களுக்கு
முன்னர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இதுஇவ்வாறிருக்க வாகீசனின் பாரிஸ் கூட்டாளி ஆதித்தன் நடாத்துக்கின்ற
ஈழமுரசு - சங்கதி - தமிழ்கதிர் - மெடியா கவுஸ் பிரென்சு காவல்துறையின்
கண்காணிப்பு உள்ளாகியுள்ளதாக அறிய முடிகின்றது.

நேரடியாகவும் மெடியா கவுஸ் மக்குள் ஆதித்தன் - கோபி - பிரான்சிஸ்(மாமா)
ஆகியோர் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் இருந்து தங்களை தப்பவைக்க தங்களின் உண்மைகளை
அறிந்தவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை
முன்வைத்து பொய்குற்றச்சாட்டுக்களை காவல்துறையிடம்
முறையிட்டு வருவதாகவும் அறியப்படுகின்றது.

இவ்வேளை பின்குறிப்புச் செய்தியாக : கே.பி போராட்டத்தை வழிநடத்துவார்
என அறிவிக்கப்பட்டவுடன் நிகழஇருந்த நிர்வாக மாற்றங்களை
கருத்தில் கொண்டு தேசியத்தின் சொத்தான ஈழமுரசினை "அசோசியேசன"; என்ற பெயரில்
ஆதித்தன் அன் கோ கையகப்படுத்தியுள்ளனர். இதற்கு உறுதுணை
வழங்கியது ரவுடி வாகீசன் ஆகும். கையகப்படுத்திய சொத்து மதிப்பு 1லடசம் யூறோவுக்கு
மேல்...தேசியத்தின் பெயரால் இப்போது நடத்தப்படுவது கொள்ளை)

முள்ளிவாய்காலில் மண்ணின் விடிவுக்காக உயிர் நீத்த
எமது தேசியத் தலைவர் - மாவீரச் செல்வங்கள் - மக்கள்
ஆகியோர்களது அர்பணிப்பை தியாகத்தை
தங்களது சுயநலத்துக்காகவும்..அதிகார வெறிக்காகவும்
முடிமறைத்து பெரும் துரோகத்தை இளைத்து வரும்
கஸ்றோ கும்பலுக்கு வாகீசன் அன் கோவின் கைது
ஒரு எச்சரிக்கையாகும்.

அதே நேரம் ஜெர்மனியின் புலிகள் அமைப்பின் பரப்புரைக்கு பொறுப்பாளராக இருந்த அகிலன் பல இலட்சம் யூரோக்களுடன் மலைமறைவாகி இரண்டு மாதங்களாகின்றது..வாகீசனின் கைதை அடுத்து யெர்மனியின் மானிலப் பொறுப்பாளர்களான பரணி(சாபுறுக்கன்) இவர் பிரான்சில் அவரது உறவினர்கள் வீட்டில் பதுங்கியுள்ளதாகவும் அதே போல சிவம் (பொண்) றஞ்சன்.(கிறீபீல்ட்) .ரவி (சுக்காட்)ஆகியோரும் இறும்பொறை ஆகியோர் தலைமறைவாகிவிட்டதாகவும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

மக்களை முட்டாள்களாக்கி
புலத்தில் இனியும் நீங்கள் வண்டியோட்டலாம்
என்று நீங்கள் நினைச்சாலும்
முள்ளிவாய்க்கால் உறவுகின் "மனிதஓலம்"
உங்களைச் சும்மா விடாது.

இது உண்மை....