தமிழீழ பிரகடனம் செய்வதற்காகவா கஜேந்திரன், சிவாஜிலிங்கம் கோத்தபாயவை சந்தித்தனர்?

Sunday, February 28, 2010
அண்மையில் தமிழ் மக்களின் அரசியல் நிலமைகள் பற்றி எனது ஊடகத்துறை நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு பற்றி அவர் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். தமிழ் டயஸ்போறாவுடன் (tamil diaspora) பேசி ஏன் ஒரு முடிவுக்கு வருகிறார்கள் இல்லை. மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் தரப்பின் கருத்துக்களை புறம் தள்ளி விட்டு அரசியல் நடத்தலாம் என கருதுகிறார்களா என்ற தொனியில் அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மீது மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களில் இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மீது மிகக்காரசாரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மொத்தத்தில் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு துரோகிகள் பட்டம் வழங்கப்பட்டு விட்டது.

இறுதியில் மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர் தரப்பின் அழுத்தம் காரணமாக தற்போது அகில இலங்கை தமிழ் காங்கிரஷின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனியாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

துரோகிகளாக்கப்பட்டிருக்கும் சம்பந்தன் தரப்பினர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களில் சில...

1) சம்பந்தன் உட்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் இந்தியாவின் கைபொம்மையாக செயற்படுகின்றனர். இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றனர்.
2) தமிழீழ கொள்கையை சம்பந்தனும் கூட்டமைப்பினரும் கைவிட்டு விட்டனர்.
3) 2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் பரிந்துரைக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட செல்வராசா கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருக்கு இம்முறை வேட்பாளர் பட்;டியலில் இடம் வழங்கப்படவில்லை.
4) சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். இவர்களின் குடும்பங்கள் இந்தியாவில் தங்கியுள்ளன.
5) சுரேஷ் பிரேமச்சந்திரனின் மனைவி கேரளாவைச்சேர்ந்தவர். எனவே அவர் நாராயணனின் சொந்தக்காரராக இருக்கலாம்.
6) தமிழ் டயஸ்போறா என்று தங்களை அழைத்துக்கொள்ளும் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளின் ஆலோசனையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெறுவதில்லை. அவர்களுடனான தொடர்புகளை பேண மறுத்து வருகிறது.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் மேற்குலக நாடுகளில் வாழும் தமிழ் தரப்பினர் சிலர் ஒரு படி மேலே சென்று சம்பந்தன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைப்பதவியிலிருந்து விலக வேண்டும் என கூறிவருகின்றனர்.

( பிரான்சில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சம்பந்தனை சுட்டுத்தள்ள வேண்டும் என்று கூட்ட ஏற்பாட்டாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாக அக்கூட்டத்தில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர் கூறினார். )

ஓட்டுமொத்தத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒளித்துக்கட்டப்பட வேண்டும், சம்பந்தனும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தமிழ் மக்கள் மத்தியில் துரோகிகளாக இனங்காட்டப்பட்டு இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற முனைப்போடு மேற்குலக நாடுகளில் உள்ள சில தமிழ் தரப்பினர் கூறிவருகின்றனர்.

பொதுத்தேர்தலுக்கு திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றியும் சம்பந்தன் உட்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் துரோகிகளாக இனங்காணப்பட்டு ஓரங்கட்டப்பட வேண்டியவர்களா என்பதையும் பார்ப்போம்.

இவர்கள் வைக்கும் முதலாவது குற்றச்சாட்டு சம்பந்தன் உட்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் இந்தியாவின் கைபொம்மையாக செயற்படுகின்றனர். அடிக்கடி இந்தியாவுக்கு சென்று பேசுகின்றனர். இந்தியாவினால்தான் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியும் என நம்புகின்றனர்.

இந்த குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் சில விடயங்களை தமக்கு மிக வசதியாக மறந்து விடுகின்றனரா என தெரியவில்லை.

மேற்குலக நாடுகளில் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்துபவர்களாக இருந்தாலும் சரி நாடுகடந்த அரசை அமைக்க இருப்பவர்களாக இருந்தாலும் சரி அவற்றின் மூலம் மேற்குலக நாடுகளின் ஆதரவைப்பெற்று அதன் ஊடாகவே தமது நோக்கத்தை அடையப்போவதாக கூறிவருகின்றனர்.

ஆனால் இந்த மேற்குலக நாடுகள் ஈழத்தமிழர் பிரச்சினையில் தலையிடுவதாக இருந்தால் இந்தியாவின் பூரண அனுமதி இன்றி அணுஅளவும் அவர்கள் அசைய மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இணக்கத்துடன் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்ட நோர்வே இலங்கைக்கு செல்லுகின்ற போதும் அங்கிருந்து திரும்புகின்ற போதும் புதுடில்லிக்கு சென்று என்ன பேசுவது என்பது பற்றியும் பின்னர் என்ன பேசினோம் என்பது பற்றியும் இந்தியாவுக்கு ஒப்புவித்து விட்டுத்தான் வந்தார்கள் என்பதை நோர்வே அண்மையில் தெரிவித்திருந்தது.

அமெரிக்காவாக இருக்கலாம் அல்லது ஐரோப்பிய நாடுகளாக இருக்கலாம் அவர்கள் முன்னிலையில் இந்தியாவா ஈழத்தமிழரா என்ற தெரிவை முன்வைக்கின்ற போது அவர்கள் இந்தியாவைதான் தெரிவு செய்வார்கள் என்பதுதான் உண்மை.

தென்னாசிய பிராந்தியத்தில் வல்லாதிக்க சக்தியாக வளர்ந்து வரும் சீனா மேற்குலக நாடுகளுக்கு சவாலாக மேலோங்கி வரும் இவ்வேளையில் அந்த பிராந்தியத்தின் மற்றுமொரு பலம்பொருந்திய சக்தியான இந்தியாவை தமது நேசசக்தியாக வைத்திருக்க வேண்டிய தேவை மேற்குலக நாடுகளுக்கு இருக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவை மீறி மேற்குலக நாடுகள் எவையும் ஈழத்தமிழர்களுக்கு உதவ முன்வருவார்கள் என நம்பமுடியாது. ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து மேற்குலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தாலும் அவர்கள் இந்தியா ஊடாகவே இந்தப்பிரச்சினையை கையாள்வார்களே தவிர இந்தியாவை தவிர்த்து விட்டு இந்தியாவிற்கு தெரியாமல் ஈழத்தமிழர்களுக்கு உதவுவார்கள் என்பது யதார்த்தத்திற்கு புறம்பானதாகும்.

இதனால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவை நோக்கி செல்கின்றனர் என நான் நினைக்கின்றேன். இது தவிர வன்னியில் யுத்தம் நடைபெற்ற இறுதிக்கால கட்டத்தில் கூட விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் இந்தியா இந்த விடயத்தில் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என கோரி சில அறிக்கைகளை விட்டிருந்தார். அந்த அடிப்படையில்தான் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இந்தியாவை நோக்கியும் மேற்குலகை நோக்கியும் செல்கின்றனர். அது மட்டுமல்ல விடுதலைப்புலிகளின் தலைவரின் இறுதி மாவீரர் தின உரையின் போதும் இந்தியாவை நோக்கி அவரின் கரங்கள் நீண்டிருந்ததையும் இவர்கள் மிக வசதியாக மறந்து விட்டனர்.

தங்களின் பெயர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என அறிந்து கொண்ட பின்னர்தான் சிவாஜிலிங்கமும் சிறிகாந்தாவும், கஜேந்திரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் கைப்பொம்மையாக செயற்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள். இவர்களின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புனிதமானவர்கள். தங்களுடைய பெயர்கள் இடம்பெறவில்லை என்றவுடன் தான் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இரண்டாவது குற்றச்சாட்டு சம்பந்தன் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விட்டார் என்பதாகும்.

சம்பந்தன் மட்டுமல்ல யார் யார் இலங்கை நாடாளுமன்ற ஆசனங்களை நோக்கி செல்கிறார்களோ அவர்கள் அனைவரும் தமிழீழ கோரிக்கையை வலியுறுத்தி செயற்பட முடியாது என்பதுதான் யதார்த்தம். பிரிவினைக்கு தாம் துணைபோக மாட்டோம் என சிறிலங்கா அரசியல் யாப்பின் 6ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எழுத்து மூலமும் வாய் மூலமும் சத்தியப்பிரமாணம் செய்த பின்பே தேர்தலில் போட்டியிடுகிறார்கள். போட்டியிட்டு வெற்றிபெற்ற பின் சபாநாயகர் முன்னிலையிலும் சத்தியப்பிரமாணம் செய்து கொள்கிறார்கள். கடந்தமுறை தெரிவான 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் 6ஆவது திருத்தச்சட்டமூலத்தின் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துவிட்டு வந்த போதுதான் விடுதலைப்புலிகளின் தலைவர் கிளிநொச்சியில் விருந்து வைத்து வாழ்த்தி அனுப்பியதையும் நாம் மறந்து விட முடியாது.

தமிழீழத்தை கோர மாட்டோம் என 6ஆவது திருத்த சட்டத்தின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்த ஜோசப் பரராசசிங்கம், ரவிராஜ் ஆகியோருக்கும் 6ஆவது திருத்த சட்டத்தின் கீழ் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட குமார் பொன்னம்பலத்திற்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மாமனிதர் பட்டம் வழங்கி கௌரவித்ததையும் நாங்கள் மறந்து விடக்கூடாது.

ஆகவே தமிழீழக் கோரிக்கையை கஜேந்திரன் அதிகம் பேசுகிறார், சம்பந்தன் குறைவாக பேசுகிறார் என நாம் தராசில் போட்டு அளந்து பார்க்க முடியாது.

மூன்றாவது குற்றச்சாட்டு செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருக்கு இம்முறை வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை என்பது.

முதலில் இந்த கட்டுரையை வாசிப்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகளால் உருவாக்கப்படவில்லை என்பதையும் 2002ஆம் ஆண்டிற்கு பின்னர் விடுதலைப்புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்பதையும் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

2001ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்ப கூட்டத்திலேயே வேட்பாளர் தெரிவு பற்றி முடிவு எடுக்கப்பட்டிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளிலிருந்தும் விண்ணப்பங்களைப்பெற்று வேட்பாளர்கள் தெரிவு செய்வதென முடிவு செய்யப்பட்டிருந்தது. இது தவிர உறுப்பினர் ஒருவர் கட்சிக்கொள்கைகளுக்கு முரணாக செயற்படும் பட்சத்தில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கட்சி தலைமை பீடத்திற்கு உண்டு என தேர்தல் சட்ட விதி கூறுகின்றது. எனவே எந்த ஒரு வேட்பாளரும் ஒரு கட்சியை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற தேர்தல் விதியை கஜேந்திரன் போன்றவர்கள் அறிந்திருக்கவில்லை போல் தெரிகிறது.

2004ஆம் ஆண்டு நான்கு கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு மேலதிகமாக விடுதலைப்புலிகளும் சிலரின் பெயர்களை கொடுத்திருந்தால் அவர்களும் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இம்முறை விடுதலைப்புலிகள் இல்லாத நிலையில் யாழ். மாவட்டத்திற்கு இந்த நான்கு கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியிடம் கூட இவர்கள் இருவரும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. இவர்கள் இருவருக்கும் வேட்பாளர் பட்டியலில் இடம் ஒதுக்கப்படவில்லை என சர்ச்சைகள் மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களில் பலமாக எழுப்பபட்ட பின்னர், யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் நிலையில் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியலிருந்து தன்னுடைய பெயரையும் விநாயகமூர்த்தியுடைய பெயரையும் நீக்கிவிட்டு செல்வராசா கஜேந்திரன் , பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரின் பெயர்களை சேர்க்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரினார்.

செல்வராசா கஜேந்திரன் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் கொண்டிருந்தால் அவர்கள் இந்த நான்கு கட்சிகளில் ஏதாவது ஒன்று ஊடாக விண்ணப்பத்தை சமர்ப்பித்திருக்க வேண்டும். அல்லது அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி ஊடாக ஆரம்பத்திலேயே இந்த இருவரின் பெயர்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சமர்ப்பித்திருக்க வேண்டும்.

இது தவிர கஜேந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கட்டுப்பட்டது கிடையாது. அவ்வாறு கட்டுப்படாத ஒருவரை அந்த கட்சி எப்படி தன்னுடைய வேட்பாளர் பட்டியலில் சேர்க்கும்.

இன்னுமொரு விடயத்தையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும் . தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படுகிறார்கள் என குற்றம் சாட்டும் கஜேந்திரன் பத்மினி போன்றவர்கள் இந்தியாவை விட மிக மோசமாக தமிழர்களை கொன்று குவித்த சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறதே?
வெளிநாடுகளில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்ச்சியில் சிறிலங்காவின் இறைமைக்கு எதிராக பேசியதாக அரியநேந்திரன், ஜெயானந்தமூர்த்தி கஜேந்திரன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரியநேந்திரன் 8மணித்தியாலங்களாக சிறிலங்கா குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் 4ஆம் மாடியில் வைத்து விசாரிக்கப்பட்டார். இந்தியாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்ற வேளையில் விமானநிலையத்தில் வைத்து திரும்பி அனுப்பபட்டார். இன்றும் அவர் வெளிநாட்டிற்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

ஆனால் கஜேந்திரன் எந்த வித பிரச்சினையும் இன்றி வெளிநாட்டிலிருந்து கொழும்புக்கு சென்றார். அவரின் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டுவிட்டது. இது எப்படி சாத்தியமானது?

அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு செவ்வி வழங்கிய கிசோர் சிவநாதன் வெளிநாட்டில் இருந்த கஜேந்திரன், சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு இருந்த சிக்கல்களை தானே மகிந்த ராஜபக்சவுடனும் கோதபாயவுடனும் பேசி தீர்த்து வைத்ததாகவும் இவர்களும் மகிந்த, கோதபாய ஆகியோரை சந்தித்ததாகவும் கூறியிருந்தார். கஜேந்திரனும், சிவாஜிலிங்கமும் தாங்கள் இன்னமும் தமிழீழ கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கிறோம் என சொல்வதற்காகவா மகிந்த ராஜபக்சவையும் கோத்தபாயவையும் சந்தித்தனர்?

கிசோரின் கூற்றை இதுவரை கஜேந்திரன் மறுக்கவில்லையே?

அதுபோல நோர்வேயில் இருந்த போது கஜேந்திரன் தன்னுடன் பேசியதாக டக்ளஸ் தேவானந்தா தனக்கு நெருக்கமான யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்திருக்கிறாரே? இது யாரின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடைபெற்றது?

அடுத்த குற்றச்சாட்டு சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தியாவிற்கு செல்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

இந்த குற்றச்சாட்டை வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் முன்வைக்கவில்லை. 10, 15 வருடங்களுக்கு மேலாக மேற்குலக நாடுகளில் தங்கள் குடும்பங்களுடன் வாழ்பவர்கள் தான் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். மாவை சேனாதிராசாவும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமது குடும்பங்களைப்பார்ப்பதற்கு இந்தியாவிற்கு செல்வதில் தவறிருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவர்கள் தங்கள் குடும்பங்களை பார்க்க செல்லது தவறென சொல்வதற்கு 10, 15 வருடங்களுக்கு மேலாக வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு நிட்சயமாக இல்லை. அதுபோல தனது சொந்த சகோதரனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வது உட்பட அவசிய தேவைகளுக்காக சம்பந்தன் வெளிநாடு செல்வதில் என்ன தவறிருக்கிறதோ தெரியவில்லை.

இப்பொழுது புதிதாக முன்வைக்கப்பட்டிருக்கும் ஒரு குற்றச்சாட்டு சுரேஷ் பிரேமச்சந்திரனின் மனைவி கேரளாவை சேர்ந்தவர் என்பதாகும். சுரேஷ் பிரேமச்சந்திரனின் மனைவி மட்டக்களப்பு லேடி மனிங் வீதியைச் சேர்ந்தவர். சிலவேளை இந்த குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் எல்லோரும் கேரளாவை சேர்ந்தவர்கள் நாராயணனின் உறவினர்கள் என புதிதாக கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. கிழக்கு மாகாண மக்களை துரோகிகள் என கூறுவதற்கு இவர்கள் எதையும் கண்டுபிடிப்பார்கள்.

அடுத்த குற்றச்சாட்டு தமிழ் டயஸ்போறாவுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பேசுவதில்லை என்பதாகும். மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எத்தனைபேர் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேசினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இது பற்றி அண்மையில் சுவிஷ் நாட்டிற்கு வந்திருந்த மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கென்றி மகேந்திரன் ஆகியோரை நான் சந்தித்து கேட்ட போது ஒரு விடயத்தை சொன்னார்கள். தாங்கள் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர் தரப்புடன் உறவுகளை பேணுவதற்கு சகல முயற்சிகளையும் எடுப்பதாக கூறிய அதேவேளை இங்கே பல பிரிவுகளாக இப்போது பிளவு பட்டு நிற்கிறார்களே ஒருவரோடு தொடர்பை பேணினால் மற்றவர் கோவித்து கொள்கிறாரே என கவலைபட்டுக்கொண்டார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் கிளைகளை அமைத்து இங்குள்ள தமிழர்களுடனும், மேற்குலக இராசதந்திர மட்டங்களிலும் தொடர்புக்களை பேணவேண்டும் என அவர்களிடம் நான் கேட்ட போது கட்டாயம் அதை செய்வதாகவும் ஐரோப்பா, ஒஸ்ரேலியா, அமெரிக்கா, கனடா இந்தியா ஆகிய நாடுகளிலும் தமது கிளைகளை அமைத்து இராசதந்திர நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்கள். இதைத்தான் இப்போது மேற்குலக நாடுகளில் உள்ள சில தமிழர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு புதுடில்லியில் அலுவலகம் அமைக்கப்போகிறார்கள் என தலையில் அடித்துக்கொண்டு திரிகிறார்கள். தமிழ் தேசியக்கூட்டமைப்பு புதுடில்லியில் அமைத்தாலென்ன சந்திரமண்டலத்தில் அலுவலகத்தை அமைத்தால் என்ன ஈழத்தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதைத்தான் நாங்கள் பார்க்க வேண்டும்.

இறுதியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைப்பதவியிலிருந்து சம்பந்தன் விலக வேண்டும் என்பதாகும்.

தவிர்க்க முடியாதவாறு இருக்கின்றவர்களில் அரசியலிலும் வயதிலும் அனுபவத்திலும் மிக மூத்தவர் என்ற வகையில் நாடாளுமன்ற குழுத்தலைவராகவும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவராகவும் ஆர்.சம்பந்தன் இருந்து வருகிறார்.

நான்கு கட்சிகளின் தலைவர்கள் என்ற வகையில் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரே பெரும்பாலும் முடிவுகளை எடுக்கின்றனர். ஆனால் சம்பந்தனையே குற்றவாளியாக்கி அவரை பதவி விலக வேண்டும் என கோருவது அவர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்ற காரணமாகவும் இருக்கலாம். அதுதவிர மேற்குலக நாடுகளிலிருந்து விடுதலைப்புலிகளின் தலைமையை ஆட்டுவித்தது போல சம்பந்தனும் தங்களுடைய ஆட்டத்திற்கு ஆட மறுக்கிறார் என்பதும் காரணமாக இருக்கலாம்.

இறுதியாக திரு. சம்பந்தன் அவர்களை பதவியில் வைத்திருப்பதும் நீக்குவதும் வடகிழக்கு பிரதேசத்தில் உள்ள தமிழர்களின் கைகளில் இருக்கிறதே ஒழிய மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்களின் கைகளில் இல்லை என்பதை அடுத்த தேர்தல் பதில் அளிக்கும்.

இரா.துரைரத்தினம்
ஊடகவியலாளர்
சுவிற்ஸர்லாந்து
thurair@hotmail.com

தேசியவாரிசுகளான ஜபிசி ரமணனும் ஜேர்மனி வாகீசனும் தேசிய மன்மதகுஞ்சுகளாக இருக்கலாம் என்றால்……

Wednesday, February 10, 2010
தேசியவாரிசுகளான ஜபிசி ரமணனும் ஜேர்மனி வாகீசனும் தேசிய மன்மதகுஞ்சுகளாக இருக்கலாம் என்றால்……
தேசிய இளவரசன் கஸ்ரோவின் வாரிசுகளால் அனுப்பப்படும் கழுசறைகளின் மீடியா கவுஸின் மின்னஞ்சல் பிரசுரமான கறுப்பு தங்களின் தலையிலேயே தங்களை அறியாமல் மண் வாரிப்போடுகிறார்கள்.
இதே தேசிய வாரிசுகளால் நடத்தப்பட்ட ” ஆய்வு ” என்ற ஒரு இலவச இணையம் தனது குப்பைகளை கொட்டமுற்பட்டது. ஆய்வுக்கு பதிலளிக்க மறுஆய்வை நாம் தொடங்கினோம். காலக்கிரமத்தில் ஆய்வு நின்று போகவும் நாமே செயற்பட்டோம். ஆய்வில் GTV என்ற தொலைகாட்சி தொடர்பாக வந்த அவதூறு செய்திகளுக்கு பழிவாங்கவே GTV தொலைக்காட்சி குழுவினரால் மறுஆய்வு நடாத்தப்படுவதாக எமக்கும் கூட பல்வேறு மின்னஞ்சல்கள் வந்தது. நாம் அதனை பொருட்படுத்தவில்லை. GTV தொலைக்காட்சிக்கும் மறுஆய்வுக்கும் ஒரு சிறு தொடர்பும் இருக்கவில்லை. GTV ஒரு தனி நபருக்கு சொந்தமானது. மறுஆய்வு தமிழீழ விடுதலை போராட்டத்தின் பல்துறை பங்காளிகளுக்கு சொந்தமானது. போராட்டத்தின் பெயராலும் தேசியத்தின் பெயராலும் புலம்பெயர் நாடுகளில் காட்டுத்தர்பார் நடத்துவோரை இனங்காட்டி முகத்திரையை விலக்குவதே மறுஆய்வின் உண்மைகளின் கட்டுடைப்பு.
இன்று மறுஆய்வு எடுத்துக்கொண்ட அதேபணியை பல தரப்பினரும் மேற்கொள்ளத்தொடங்கியது வரவேற்புக்குரியது. எவர் மேற்கொண்டாலும் முன்னோக்கி நகரதுடிப்பவர்கள் சுத்தமானவர்களாக இருக்கவேண்டும். நாம் சுத்தமானவர்கள் என்பது எமது மனசாட்சியுடன் சம்பந்தப்பட்டது.
GTV இன் உரிமையாளர்கள் யார்???
அவுஸ்ரேலியாவில் கணக்காளராக இருக்கும் ஒரு கணக்காளர் நிறுவனத்தை இயக்கும் செல்வி சீவ நாயகம் என்பரது சொந்த மூலதனத்தில் இயங்குவதாகவே மறுஆய்வு அறிகிறது. தமிழ் தேசியத்தை மானசீகமாக மதிக்கும் இவர்களின் குடும்பத்தவர்கள் அனைவரும் தேசிய தலைவரென கூறப்படும் பிரபாகரனுக்கும் நன்கு தெரிந்தவர்கள். பல தடவைகள் சந்தித்துமுள்ளனராம்.
GTV இன் உரிமையாளரான செல்வி சீவனாயகத்தின் சகோதரனான சீவன் சீவ நாயகம் ஒரு இருதய சத்திரசிகிச்சை நிபுணராகும். இவர் தற்போது நாடு கடந்த அரசின் முக்கிய செயற்பாட்டாளராகவும் உள்ளார். இரு சகோதரர்களும் அவுஸ்ரேலியாவில் 1985 முதல் 2000 வரை ஆரம்பகாலத்தில் TCC க்காக செயற்பட்ட செயற்பாட்டாளர்கள் என இவர்களை தெரிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
சமாதான காலத்தில் பிரபாகரனுக்கு முழு உடற்பரிசோதனை செய்த டாக்குதரில் சீவன் சீவ நாயகமும் ஒருவரென அறியப்படுகிறது. பால்ராஜ் இருதய சிகிச்சைக்காக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற போது பால்ராஜ் உடன் கூட இருந்தவரும் சீவன் சீவ நாயகம் என்பது விடயம் அறிந்தவர்கள் தரும் தகவல்.
இங்கு GTV தொலைக்காட்சியை நடாத்துபவர்கள் துரோகிகள் விலை போனவர்கள் தேசியத்துக்கு எதிரானவர்கள் என அவுஸ்ரேலியாவில் இந்த தொலைக்காட்சியை புறக்கணிக்க சொல்ல முடியுமா இந்த தேசிய மக்குகளால் …… இந்த பருப்பு அவுஸ்ரேலியாவில் வேகாது என்கின்றனர் சிட்னியில் மறுஆய்வுடன் தொடர்புடயவர்கள்.
மன்மத குஞ்சுகளா உங்களுடைய மன்மத லீலையை வென்றார் உண்டோ!!!!!
GTV யில் தற்போது புகுந்து கொண்ட ஜெகன் என்ற ஒரு பொது மகனுக்கும் தேசிய தலைவர் நேரடியா அனுப்பி வெளி நாட்டு வேலைத்திட்டத்து வந்தவர்கள் என்ற கோதாவில் தேசிய வாரிசுகளாக உங்களை வரித்துக்கொண்ட எலிகளே உங்களின் சில்மிச லீலைகளை யாரிடம் முறையிடுவது…….ஒவ்வொருவருடைய மன்மதலீலைகளையும் புலிக்கொடி கட்டி பறக்க விடவா?
அதுசரி மே18 க்கு முன்னர் உங்களின் தேசிய வானொலியாம் ஜபிசி தமிழில் ஜெகன் பணிபுரியும் போது ஜெகனின் மன்மத ஸ்பரிசம் தெரிந்திருக்கவில்லையா? அல்லது முன்னர் TTN இல் இருந்து ஏன் விலக்கப்பட்டார் என்பது உங்களின் ஆய்வின் புலனாய்வுக்கு தெரியாமல் போய்விட்டதோ ?? மதன காமராசாக்களே எப்படி ஜெகன் திடீரென RAW , NIB க்கும் விலை போனார்??? அங்கய‌ற்கன்னி ஜபிசியின் இரசிகையாக இருந்ததும் தெரியும்…. அங்கயற்கன்னியின் பின்புலம் தெரியாமல் சேர்த்துவைத்து குலாவியதும் எமக்கு தெரியும். உங்களுடன் குலாவும் மட்டும் தியாகி………… உங்களை விட்டு விலகினால் துரோகியோ??
மதன காமராசாக்களே!! மன்மத ரமணனுக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?? நாட்டில் பெண் போராளியை காதலிப்பதாக உறுப்பினர் விபரப்படிவத்தில் பதிந்துவிட்டு ஜேர்மனிக்கு வந்தவர் வாகீசன். ஜேர்மனி வந்த சில மாதங்களிலேயே ஜேர்மனிய புதுகாதலியுடன் காதல் வசப்பட்டு மன்மதன் வாகீசன் மன்மதலீலைகளில் ஈடுபட்டது தெரிந்தும் இளவரசன் கஸ்ரோ நடவடிக்கை எடுக்காமல் விட்டதும் நாட்டில் போராளி காதலியை ஏமாற்றியதை விடவா பொது மகனான ஜெகன் பெரிதாக ஏதும் செய்துவிட்டார்.
பிரபாகரன் அனுப்பி வந்ததாக சொல்லி விலாசம் தேடிய உங்களுக்கு இது சமர்ப்பணம்…….
1989இல் பிரபாகரனுக்கு மெய்க்காப்பாளராக இருந்த தியாகு மணலாற்றில் பெண் போராளி ஒருவருடன் காதல் வயப்பட்டு அத்துமீறி பாலுறவு கொண்டதால் தியாகு மணலாற்றில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
குறித்த பெண்போராளி வயிற்றில் ஏதோ பிரச்சனை என சொன்னதால் அந்த நெருக்கடியான நேரத்தில் கூட இந்தியாவுக்கு சிகிச்சைக்காக அனுப்பபட்ட இடத்திலேயே அப்பெண் போராளி கர்ப்பமாக இருக்கும் விடயமும் தியாகுவே காரணமான காதலன் என அறியமுடிந்தது. தியாகுவுக்கு மணலாற்றில் ZIG pistol மூலம் கேணல் சங்கர் தான் மரணதண்டனையை நிறைவேற்றினார். ZIG PISTOL வரலாற்றை சங்கர் தன்னுடன் பணியாற்றிய போராளிகளுக்கு விலாசமாக சொல்லிகொள்வார்.
இந்தியாவில் குறித்த பெண்போராளிக்கு அப்போது புலிகள் இயக்கத்தின் கரைவேலைக்கு பொறுப்பாக இருந்த குண்டர் தான் மரண தண்டனையை நிறைவேற்றினார். பின்னர் அதே குண்டரும் அதே தவறை விட்டு இயக்கத்தை விட்டு ஓடினார். குண்டரை ஜபிசிக்குள் இணைத்து கூத்துபோட்ட தேசிய மன்மத குஞ்சுகளா இன்று உங்களை விட்டு விலகி தன்னிச்சையாக புலிகள் இயக்கத்தை உரிமை கொண்டாட குண்டர் அணி முற்பட்ட போது தான் குண்டரும் RAW இன் நுழைவும் தெரிந்ததோ தேசிய மன்மத மக்கு குஞ்சானுகளுக்கு!!!!!
மறுஆய்வுடன் மோதுபவர்கள் கொஞ்சமாவது கட்ஸ்ஸூடன் வாருங்கள்………

நன்றி மறு ஆய்வு இணையம்

நடந்தது என்ன? நடப்பது என்ன? போட்டுடைக்கிறார் முகிலன்……

Tuesday, February 9, 2010
நடந்தது என்ன? நடப்பது என்ன? போட்டுடைக்கிறார் முகிலன்……
மிகுந்த உணர்ச்சி வசப்பட்டவராய் மறு ஆய்வைத் தொடர்பு கொண்ட முகிலன், இனிமேலும் என்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது…. மே 18க்குப் பின்னான பெருங் குழப்பங்களுக்குக் காரணம் அவன்தான்….. ஜேர்மனி வாகிசன்தான் காரணம் என படபடத்த குரலில் தொடங்கினார்…..
மேற்கொண்டு முகிலன் தொடர்வதற்கு முன்பாக,……… யார் இந்த முகிலன்? பிரான்சில் அகதி வாழ்க்கையைத் தொட‌ங்கிய இவர் 1990 இன் நடுப்பகுதிகளில் தானும் தனது நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற உயரிய எண்ணத்தோடு பிரான்ஸ் நாட்டுக் கிளையின் பணிமனையோடு தொடர்பு கொண்டு நாதன் என்கிற பெயரில் தன்னுடைய வேலையைத் (நாட்டுப் பணி) தொடங்குகிறார். தமிழீழத்தில் அமைதிக்கான முன்னெடுப்புக் காலம் தொடங்கிய பின்னர் தன்னை அமைப்போடும் நாட்டோடும் மேலும் நெருக்கிக் கொள்வதற்காக 2004 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாடு திரும்பி பொறுப்பாளர் கஸ்ரோ அவர்களைக் கண்ட பின்பு நந்தவனத்தில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார். நந்தவன பணி தொடர்பாக சில நாட்கள் புளியங்குள‌ ஆயப்பகுதியிலும் வேலை பார்த்தவர். பின்னர் பொறுப்பாளரின் கட்டளைப்படி அதே ஆண்டு நடுப்பகுதியில் பயிற்சிக்காக அனுப்பப்பட்டு, பயிற்சி முகாமிலிருந்து மயூரனாக இலட்சியக் கனவைத் தாங்கி வெளியேறுகிறார்.
வெளியேறிய மயூரன் தனது இயக்க வேலையை ஒருசில வருடங்கள் நாட்டிலிருந்து செய்து கொண்டிருக்கும் வேளையில், இவரது திறமையால் ஈர்க்கப்பட்ட பொறுப்பாளர் இவரை வெளிநாட்டுக் கிளையொன்றுக்குப் போடுவதற்கு முடிவெடுக்கிறார். அதன்படி 2007 ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து வெளியேறி முகிலன் என்கிற பெயரில் நோர்வே நாட்டுக் கிளையின் பொறுப்பாளராகிறார்……. இவை முகிலனின் மறு ஆய்வுடனான தனது அறிமுகப்படுத்தல் உரையாடலில் இருந்து.
இனி முகிலன் தொடர்கிறார்…… வெளியில எல்லாம் ஒழுங்காத்தான் இருந்தது. முள்ளிவாய்க்காலைப் போல எந்த ஆமியும் இங்கு படையெடுக்கல்ல….. தடை செய்த குண்டுகள வீசி எதையும் அழிக்கவுமில்ல…. யாரையும் கொல்லவுமில்ல…….. என்று தழுதழுத்த குரலில் தொடங்கினார்.
மே 18க்குப் பிறகு நெடியவன் ஒரு முடிவை எல்லாக் கிளைக்கும் அறிவித்திருக்கலாம். ஆனா அதை அவர் செய்யல்ல, அவர் கிளைப் பொறுப்பாளர்கள் மட்டுமில்லாம செயல்பாட்டாளர்கள், அமைப்புக்கு சம்மந்தமில்லாத வெளியாட்கள், ஏன் தனது சொந்தங்களிடமும் கருத்துக் கேட்க ஆரம்பித்து விட்டார். கருத்துக் கேட்கிற நேரமா அது……….? அனைவருமே, நானும்தான் – இயக்கத்தைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ யோசிக்கல்ல. யோசிக்கிற நிலமையிலயா இருந்தோம்? இப்போதுதான் ஜேர்மனி வாகிசன் முக்கிய பங்கை எடுக்கிறார். அவர்தான், இப்ப நாட்டில ஒன்றும் மிஞ்சி இருக்காது, இயக்கத்தின் பிரிவுகள், கட்டமைப்புக்கள் எல்லாம் சிதைஞ்சு போச்சு, பிரிவுகளில் இருந்து யாராவது தப்பினாலும் ஒருவர் அல்லது இருவர்தான் தப்பியிருக்க முடியும். அவர்களால் இயக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது. அனைத்துலகத் தொடர்பகம்தான் நாட்டிலிருந்ததைத் தவிர கட்டுடையாமல் உள்ளது. எனவே நாம்தான் இயக்கப் பொறுப்பை எடுக்கவேணும். தலைவர் வீரச்சாவடைந்திருந்தாலும் அதை அறிவித்தால் எங்கட சனம் காசு தராது, பயமும் போய்விடும். எனவே, தலைவருடைய வீரச்சாவை யார் அறிவிக்க முனைந்தாலும் நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்கவேண்டும். ஏனெனில் எம்மிடம்தான் ஊடகம், பணம் மற்றும் பரப்புரைக் கட்டமைப்புக்களும் உள்ளன…….. அப்பாடா, எனக்கும் சரியாகத்தான் பட்டது. எல்லோரும் இறங்கிவிட்டோம் செயலில்……. என்று தொடர்ந்தார் முகிலன்.
குழப்பங்கள்தான் நீண்டு கொண்டே போகிறது. மக்களின் அவலங்களை பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டும் என்னால் இருக்க முடியாது என்பதாலும் அமைப்பு பலப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடுதான் உங்களோடு கதைக்கிறேன். இன்னமொன்று முக்கியமானது, ஆமிட்ட சரணடைந்து காம்பிலிருந்து வெளியேறி வந்த அறிவையும் கலையழகனையுந்தான் வாகீசனின் அறிவுறுத்தலுக்கமைய எங்களுக்கெல்லாம் பொறுப்பாய்ப் போடப்பட்டுள்ளது. கிளைகளுக்கும் புதிது புதிதாய்ப் பொறுப்பாளர்கள். இவர்கள் யாரால் நியமிக்கப் படுகிறார்கள். எனக்கு இவற்றில் நிறைய சந்தேகங்கள் வர ஆரம்பித்துள்ளது, தேவைப்படுமாயின் அதையும் உடைப்பேன் என்று முடித்தார் நோர்வே கிளைப் பொறுப்பாளர் முகிலன்.
மக்களே இது முகிலனின் தவிப்பு. உள்ளத் திறப்பு. மற்றவர்களும் விரைவில் மனம் திறப்பார்கள்.

பிரான்ஸ் தமிழ் மக்(கு)கள் பேரவையின் மாதாந்த கூட்டமும் அதன் தீர்மானங்களும்

Monday, February 8, 2010
பிரான்ஸ் தமிழ் மக்(கு)கள் பேரவையின் மாதாந்த கூட்டமும் அதன் தீர்மானங்களும்

பிரான்சின் மக்(கு)கள் பேரவையின் மாதாந்தக்கூட்டம் 07.02.10.124 Bis rue du Bagnolet ல் அமைந்துள்ள மண்டபத்தில்
( metro : Porte de Bagnolet - ligne 3) ஞாயிறன்று நடைபெற்றது நூறு பேரளவில் கலந்து கொண்டிருந்த இந்தக்கூட்டத்தில் பிரான்ஸ் தமிழ் மக்(கு)கள் பேரவையின் தலைவர் சோதி அவர்கள் சில தீர்மானங்களை நிறவேற்றினார்..அவற்றில் முக்கியமானவை கீழே

1) ஜரோப்பிய ஒன்றியத்தினுள் புகுந்து வேலை செய்வது.....

ஜரோப்பிய ஒன்றியம் என்ன இவரது சொந்தக்காரரின் வீடா புகுந்து வேலை செய்வதற்கு. பிரான்சின் அரசியலில் எந்தவொரு தேசியக் கட்சிகளிலும் அடிப்படை உறுப்பினராகவேனும் இல்லாதது மட்டுமல்ல சாதாரணமான பிரான்சின் அரசியலில் எந்தவொரு கிரமசபையில் கூட செல்லவாக்கு செலுத்தாக தமிழ் மக்(கு)கள் பேரவை ஜரோப்பிய யூனினிற்கள் புகுந்து வேலை செய்யப் போகிறார்களாம்..அதுமட்டுமல்ல அண்மையில் இவர்களால் நடாத்தப்பட்ட வட்டுக் கோட்டை மீதான கொட்டைப்பாக்கு தீர்மான வாக்கெடுப்பு பற்றிய விபரங்களே பிரான்சின் உள்ளுர் பிரெஞ்சு பத்திரிகைகளில் கூட இடம்பெற்றிருக்கவில்லை யென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது..இந்த லட்சணத்தில் இவர்கள் மக்களை வைத்து காமெடி கீமெடி பண்ணுகிறார்களா??

தீர்மானம் 2) யுத்தத்தில் பாதிக்கப்பட்;ட போராளிகளிற்கும் குழந்தைகளிற்கும் உதவுவது

எப்படி உதவப் போகிறார்கள்?? மகிந்தாவுடன் ஒப்பந்தம் போட்டா?? இலங்கையில் எந்த உதவி முயற்சிகளும் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி செய்யமுடியாது அப்படி உதவுவதானால் எந்த உதவி நிறுவனமானாலும் இலங்கையரசுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தி இவர்கள் யார்?? உதவும் நோக்கங்கள் என்ன என்பதனை தெளிவாக புரியவைத்துத்தான் அனுமதி பெற்றபின்னரே அங்கு உதவிகளை மேற்கொள்ளலாம்..நிலைமை இப்படியிருக்க நாங்கள்தான பிரான்ஸ் மக்கள் பேரவை தனித் தமிழீழத்தற்கான வாக்கெடுப்பு நடத்தியவர்கள் நாங்கள் போராளிகளிற்கு உதவப் போகிறோம் என்று இலங்கையரசிடம் அனுமதி பெற்றுள்ளனரா??யாருக்கு காது குத்துகிறார்கள்..

தீர்மானம் 3) தேசியக்கூட்டமைபின் தலைவர் சம்பந்தரை போட்டுத்தளுவது

சோதியின் இந்தத் தீர்மானத்தினை நிறைவேற்றியதுமே கூட்டதில் பலர் சோதிக்கு எதிராக குரல் எழுப்பியதும் சோதி உடனேயே வழிந்தபடி நான் சும்மா பகிடிக்கு சொன்னாhன் என்றுவிட்டார்..யானைக்குட்டி பொய் சொன்னது என்கிற கதைபோல மழுப்பிவிட்டார்..ஆனால் இவரது இந்த ஒரு தீர்மானமே பிரான்ஸ் தமிழ் மக்(கு)கள் பேரவையை தடை செய்யப் போதுமானது.. இவர் போன்ற அரசியல் அறிவு எதுவுமேயற்ற ஒரு அரைகுறை தலைவராக இருக்கும் ஒரு அமைப்பின் கீழ் மக்கள் எப்படி திரள்வது.

தீர்மானம் 4) மேலே கூறிய எல்லாவற்றையும் நிறைவேற்றுவதற்கு உனடியாக ரிக்ற்றுகள் அடித்து பணம் சேர்ப்பது.....

பணம் எதுக்கு யாரிற்காக சேர்க்கப் போகின்றார்கள் என்பதற்கு புலநாய் உங்களிற்கு புரியவைக்கவேண்டியதில்லை எனவே மக்களே உசார்ர்ர்ர்ர்ர்ர்.....


சோதிஎன்பவர் புலிகள் அமைப்பில் இருந்த தவபாலன் என்பவரின் சகோதரர் என்கிற தகுதியைத் தவிர வேறெந்த தகுதியும் அற்றவர்.. அதுமட்டுமல்ல இந்த அமைப்பினை இயக்குபவர்களில் ஒருவரான சுக்குளா என்பவர் புலிகளின் வடமராச்சி நெல்லியடி பிரிவு அரசியல் பொறுப்பாளராக இருந்தவர்


ஈழத்தில் இந்தியப்படை காலத்தில் இந்திய இராணுவத்திடம் பிடிபட்டு பின்னர் பெருந்தொகையான ஆயுதங்களையும் பலபோராளிகளையும் இந்திய இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்தவர்..அதே நேரம் புலிகள் அமைப்பினால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத் தக்கது..இவரை நன்றிக்கடன் மறவாத இந்திய இராணுவம் கொழும்பில் கொண்டுவந்து விட்டதையடுத்து இவர் வெளிநாடு வந்து சேர்தவராவர்.. அடுத்தவர் மேக்தா என்பவர் .இத்தாலியில் புலிகளின் அமைப்பிற்கு பரப்புரைக்கு பொறுப்பாக இருந்த காலத்தில் பலர்மோ நகரில் இரண்டு தமிழ் பெண்களுடன் பாலியல் தொர்புகளை வைத்திருந்து இயக்கப் பணத்தினை அவர்களிற்கு செலவளித்த காரணத்தினால்..அவரின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்குடன் புலிகளால் பாரிசிற்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தார்..ஆனால் பாரிசில் மக்களிடம் மிரட்டி பணம் சேர்த்தார் என்று பிரெஞ்சு காவல்த்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது..தற்சமயம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் வெளியில் உலாவும் இவரும் தமிழ் மக்(கு)கள் பேரவையின் முக்கிய இயக்குனர்..இப்படி கள்ளரும்..காட்டிக்கொடுத்தவர்களும் சேர்ந்து இயக்குகிற மக்(கு)கள் பேரவைதான் ஈழத்தமிழர்களிற்கு தமிழீழம் வாங்கிக் கொடுக்கப் போகிறதாம்...

புலநாயின் புலனாய்வுகள் தொடரும்...............

புலம் பெயர் தமிழ் மக்களே உங்களை ஏமாற்ற

Sunday, February 7, 2010
உதவி………உதவி…….SOS…….SOS…….
புலம் பெயர் தமிழ் மக்களே உங்களை ஏமாற்ற மீண்டும் மிடுக்குடன் கோண்டாவிலில் விலாசமில்லாத அனாமதேய பெயரில் காசு கறக்கும் திட்டத்துடன் ஜேர்மனியில் ஒரு கோண்டாவில் உருவாக்கப்பட்டுள்ளது. கவனம் ஏமாந்து விடாதீர்கள். நாம் அடிக்கடி உங்களை மக்குகள் எனச்சொல்வது உங்களை அசௌகரியப்படுத்தும் என்பது எமக்கு தெரியாததும் அல்ல. என்ன செய்வது போலிகளை இனங்காட்ட எமக்கும் வேறு வழி தெரியவில்லை. கடந்த 8மாதங்களுக்கும் மேலாக வன்னியில் உள்ள எமது அருமை மக்களுக்கோ அல்லது நாட்டாற்றில் விடப்பட்டுள்ள அப்பாவிப்போராளிகளுக்கோ அல்லது கைவிடப்பட்ட போராளி , மாவீரர் குடும்பங்களுக்கோ இந்த தேசிய வாரிசுகளிடமிருந்து முன்னர் கையிருப்பில் இருந்த ஒரு சொட்டுப்பணமும் போய்ச்சேரவில்லை என்பதை இத்தருணத்தில் உங்களுக்கு கூற கடமைப்பட்டுள்ளோம்.
எனினும் புதிய வியாபார முயற்சிகள், ஜரோப்பாவில் புதிய தொலைக்காட்சி தொடங்குதல், வட்டுக்கோட்டை தேர்தல், மக்கள் பேரவை தேர்தல், நாடு கடந்த அரசு தேர்தல், குளோபல் தமிழ் போரம் கூடி கலந்துரையாடல் என பல்வேறு வழிகளில் உங்களின் கோடிகணக்கான பணம் டொலர்களிலும், பவுண்ஸ்களிலும், யூரோக்களிலும் இந்த 8 மாத காலத்தில் செலவளிக்கப்பட்டுள்ளது. முதலிடப்பட்டுள்ளது. முதலிட முயற்சிகள் நடைபெறுகின்றன.
இதேவேளை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பல பினாமிகளும் போராட்டத்தின் பெயரிலான பல கோடிக்களை தம்வசப்படுத்தியுள்ளனர். உதாரணத்துக்கு சில……
கனடாவில் உலகத்தமிழர் இயக்க அலுவலகம் விற்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. விரைவில் அது தொடர்பாக ஆராய்வோம்….
அவுஸ்ரேலியாவில் TCC க்கு உரித்துடைய ஒரு நிலையான சொத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் சேகரிக்கப்பட்ட பல்லாயிரம் யூரோக்களுடன் அகிலன் என்பவர் தலைமறைவு………. இது விரைவில் அம்பலப்படுத்தப்படும்……… காத்திருங்கள்

பிரான்ஸ் தமி் ழ் மக்குகள் பேரவையின் சுருட்டல்கள்

Friday, February 5, 2010
- அது ஒரு சோசல் மெடத்தின் அலுவலகம்
பிரான்சில் புகலிடம் கோரிய பல்லின மக்களும்
அந்த அலுவலகத்தில் காத்திருக்கின்றனர்.

தமிழர் ஒருவர் தனக்கான உதவியை கேட்டு நிற்கின்றார்.

அலுவலக பணியாளர் அந்த தமிழரிடம் கொடுத்த முகவரி

"தமிழர் ஒருங்கிணைப்புக் குழு"


- சீட்டால் வந்த குடும்ப பிரச்சனை.
தீர்த்து வைக்க யாருமில்லை.
நீதி சொல்ல இருக்கின்ற சமூக மையம் எது ?
வாருங்கள் "ரீசீசீக்கு போவம்"

- 4 ஆண்டுகளாய் பல நாடுகள் கடந்து

பிரான்சுக்கு வந்து சேர்ந்தவனுக்கு

இராவணுவ கெடுபிடிகளினால் இடம்பெயர்ந்த
தனது குடும்பம்
எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை !

ஊரில இருக்கிற தன்ர உறவுகளுடன்
தொடர்பை ஏற்படுத்த
சென்ற இடம்
" தமிழர் ஒருங்கிணைப்புக் குழு"


இவ்வாறு பிரான்ஸ் தமிழர்களின் வாழ்வியலோடு
பிண்ணிப் பிணைந்த வரலாறு
ரீசீசீ என சுருக்கமாக அழைக்கப்படும்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு உண்டு.

மண்ணின் விடுதலைக்காக
புகலிட நாடுகளில் ஊன்றப்பட்ட
வெறும் அமைப்பல்ல அது.

விடுதலைக்கான நீரை மட்டும் இங்கிருந்து அது இறைக்கவில்லை.
புலத்து தமிழர்களின் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களோடு
புகலிட வாழ்வியலையும் பதிவு செய்த ஒரு மையம்.

தலைவனை நெஞ்சினி;ல் ஏந்திக் கொண்டு மண்ணையும்..
மக்களையும்..மாவீரர்களையும் நேசித்து
விடுதலையே மூச்சாக கொண்டு
இங்கு செயற்பாட்டாளர்களாக பணியாற்றியவர்கள்
போற்றுதலுக்கு உரியவர்கள்

குடும்பச் சுமை
பொருளாதாரச் சுமை
அந்நிய தேசம்
மொழிப் பிரச்சனை
என பல்வேறுபட்ட நெருக்கடிகள் புறத்தில் சூழந்து கொண்டாலும்
அகத்தில் விடுதலையே நெருப்பாய் இருந்தது.
அது இவர்களை ரீசீசீயில் ஒருமித்து உழைக்க வைத்தது.


இவ்வாறு கால்நூற்றாண்டைக் கடந்த
ஒரு சமூக அசைவியக்க மையம்
இன்று பல நெருக்கடிகளுக்கு அகப்பட்டு
தனது கதவை பூட்ட வேண்டிய நிலைக்கு
வந்துள்ளது என்பது மிகவும் ஒரு சோகமான விடயம்.

2007ம் ஆண்டு ஏப்பரல் 1நாள்
17 சமூகப்பணியாளர்கள் பிரென்சு காவல்துறையால்
கைது செய்யப்பட்டதும் - பின்னர் அவர்களுக்கான நீதிமன்ற தீர்ப்புக்கமைய
ரீரீசீ அலுவலகமும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தள்ளிவைக்க தமிழர் தரப்பு முயற்சி செய்தாலும்
அது சாத்தியமற்ற நிலையே காணப்படுகின்றது.

இந்நிலையில் ரீசீசீ பூட்டப்பட வேண்டும் என்று
பிரென்சு காவல் துறையைவிட அதிகம் விரும்பவது
ரீசீசீயால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருவாக்கபட்ட
மக்கள் பேரவைதான் என்பது தற்போது அம்பலமாகிவருகின்றது.

இக்குற்றச்சாட்டு "மக்கள் பேரவையை" முடக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
ரீசீசீயையும் அதனையே மூச்சாக கொண்டு செயற்படும்
பணியாளர்களின் நலன் கருதியுமே
இதனை இங்கு நாங்கள் வெளிப்படுத்த விரும்புகிறோம்.

முன்னர் நீதிமன்ற தீர்பினால்
ரீசீசீ அலுவலகம் பூட்ட வேண்டி வந்தால்
அதற்கு மாற்றீடாக சில மாதங்களுக்கு
உருவாக்கப்பட்டதுதான் மக்கள் பேரவை.

நோக்கம் சரியானது...!

ஆனால்
இன்று மக்கள் பேரவையின் பிரதிநிதிகள் என்று
சொல்பவர்கள்யார் ?
அவர்களின் பிண்ணனி என்ன ?

சற்று சிந்தித்து பார்க்க வேண்டிய விடயம் !

- போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதன் காரணமாக
பிரென்சு சிறையில் இருந்து
பின்னர் ஏற்படுத்திய உடன்பாட்டுக்கமைய
பிரென்சு குடியுரிமையை பெற்றுக் கொண்டு
அதற்கு பதிலீடாக ரீசீசீக்குள் நுழைந்து அதன் செயற்பாடுகளை
ரகசியமாக கொடுத்து வருகின்றவர்....

- "பாலியல் சேட்டை" முறைப்பாடுகள் காரணமாக
பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டு
பின்னர் இங்கு வந்து தொடர்ந்தும்
பெண்களுடன் பாலியல் சேட்டைகளை புரிந்து வருபவர் மட்டுமல்லாது
ரீசீசீ பணியாளர் வீடு வீடாக படியேறி சேர்த்த பங்களிப்புக்களில்
1 லட்சம் யூரோ வரை "77ம்" டிப்பாட்மென்டில் இருக்கின்ற குடும்பம் ஒன்றிடம்
பத்திரமாக வட்டிக்கு விட்டுத் தரச் சொல்லிவிட்டு
தற்போது அந்தக் குடும்பம் லண்டனுக்கு போக போற நிலையில்
பணத்தை மீட்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்.
(பாவம் ரீசீசீ பெடியள் அவங்கள் கிடைக்கிற லீவில
வீடுவீடாய் சேர்த்த காசு இப்படி கையப்படுத்தப்படுவது பெரும் வேதனை)

- புலிகளோடு பழகினால் தனது "நசுனல்ரிக்கு" பிரச்சனை என்று
ஒதுங்கி இருந்து
சொந்த வீடு வாசல் எல்லால் வேண்டி விட்டு
இப்போது தான் ஒரு முழுப்புலி எண்டு
சொல்லிக் கொண்டிக்கிற நபர்.

இவ்வாறு நீண்டு செல்லும் தில்லுமுல்லுகளை
ரகசியமாக செய்தும் செய்து கொண்டும் இருப்பவர்கள்
இன்று மக்களை மட்டுமல்ல
ரீசீசீ பணியார்களை
அதன் கட்டமைப்பை
தங்கள் பின்னால் அணிதிரளுங்கள் என்று
அழைக்கிறார்களாம் !

தேசியதின் பெயரால் இணைக்கப்பட்ட வளங்கள்
( மகளிர் அமைப்பு - கலை பண்பாட்டுக்கழகம் -
விளையாட்டுத் துறை - இளையோர் அமைப்பு...)
இவற்றை எல்லாம் தங்களின் சுய தேவைகளுக்காகவும்
சுகபோக வாழ்வுக்காகவும்
இவர்கள் பாவிக்க முனைகின்றனர்.

இவர்களை அமைப்புக்குள் அழைத்து
வந்த டென்டார்க் விடுதலைக்கு (குட்டி) இது பற்றியோ
அல்லது இதன் தாக்கம் பற்றியோ எந்தவித அக்கறையும் இன்றி
பிரான்ஸ் அமைப்பை இவ்வாறு சிதைவுற செய்து விட்டு
அவர் போய்விட்டார்.

அது போல் இப்போது விடுதலையால் நியமிக்கப்பட்ட சச்சிக்கு
இதுபற்றி முழுமையாக அறிந்து கொள்கின்ற பக்குவமோ
அல்லது ஆளுமையோ இல்லை என்பது கண்கூடு.
பகுதி நேரமாக இங்கு பொறுப்பாளர் பதவியில் உட்காட்ந்து விட்டு
(வெள்ளி வந்து திங்கள் போய்)
செல்கின்ற சசிககுக இது பற்றிய அறியவோ
அல்லது தெரியவோ வாய்பில்லை.

சச்சி மட்டும் பாவமல்ல ரீசீசீக்கு பின்னால்
தாயக விசுவாசத்துடன் இணைந்து பணியாற்றுகின்ற
பணியாற்றின செயற்பாட்டாளர்களும் பாவம்தான்.

அன்பாந்த பணியாளர்களே !

எதிர்வரும் காலங்களில் கூட்டப்படுகின்ற சந்திப்புக்களிலோ
அல்லது கூட்டங்களிலோ
மேற்குறிப்பிட்ட தகவல்களை
கேள்விகளா எழுப்புங்கள்..

உங்களுக்கு அந்த உரிமை உண்டு.
அதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் உண்டு.

நீங்கள் கேள்வி எழுப்பாத பட்சத்தில்
நீங்களும் அவர்களது சுத்துமாத்துக்களுக்கு மட்டுமல்ல
இனத்தின் விடுதலையை குழிதோண்டி புதைக்கிற செயற்பாடுகளுக்கும்
உடந்தையானவர்கள் ஆகிவிடுவீர்கள் !

பெயர் குறிப்பிடதா இந்த குற்றச்சாட்டை முன்வைத்து
கேள்வி எழுப்ப வேண்டாம்
என்று உங்களை தடுக்கலாம்.
அதற்கு வாய்ப்பு கொடுக்காதீர்கள்.

குழப்பத்தை ஏற்படுத்தி செய்பாடுகளை சிதைப்பதல்ல எங்கள் நோக்கம்.
உங்கள் உழைப்பை இவர்கள் கையகப்படுத்தவும் சிதைக்கவும் இனி
அனுமதிக்க முடியாது.

நீங்கள்தான் தொடர்ந்தும் செயற்பட போகின்றவர்கள்...


நீண்ட பல மாதங்களாக இவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட
அவதானிப்புக்கள் புலனாய்வுகள் மூலமாகவே
இது கண்டறியப்பட்ட விடயங்களே
நாங்கள் முன்வைக்கின்றோம்.

இதற்கான ஆதாரங்களை அம்பலமாக்க வேண்டிய சூழல் வந்தால்
ஒலி-ஒளியாக
அவற்றை இங்கு முன்வைப்போம்.

அதற்கு முன்னர் நீங்கள்
கேள்விகளை எழுப்புங்கள்.

நாடுகடந்த அரசு ஒரு பம்மாத்து...
கேபி துரோகி..
ரீசீசீ பழைய ஆட்கள் கதிரைக்கு ஆசைப்படுகினம்
என்று பொய்யான கதைகளை உங்களுக்கு தொடர்சியாக சொல்லி
தங்களின் பொய்களையம் சமூகச் சீர்கேடுகளையும் மூடிமறைக்க
இவர்கள் முனைவது மட்டுமல்லாது
தங்களது இருப்பை தக்க வைக்கவும்
இவர்கள் முனைகின்றனர்.

இந்த தேச விரோத செய்பாடுகளை அனுமிக்க போகிறோமா ?

அதற்கு இனியும் இடம் கொடுக்காது கேள்வி எழுப்புங்கள்.

நீங்கள் எழுப்புகின்ற கேள்விகளின்
புற தாக்கங்களை உள்ளிருந்து
அவதானித்து விட்டு
யார் அந்த நபர்கள் ?
அவர்களின் நோக்கம் என்ன ?
அதன் ஆதாரங்கள் என்ன .?
என்பனவற்றை வெளிப்படையாக அம்பலப்படுத்துவோம்.

சந்திப்போம்..